களனி பல்கலைக்கழக விடுதியின்
நான்காம் மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்தார் எனக் கூறப்படும் மாணவனின் பிரேத பரிசோதனை இன்று (24) ராகம போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
நேற்று (23) பிற்பகல் மஹர சட்ட வைத்திய அதிகாரி மற்றும் அரசாங்க பரிசோதகர் ஆகியோர் விபத்து இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் மாணவர்கள் உட்பட 21 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.