(பாறுக் ஷிஹான்)
சுமார் 2000 கிலோவுக்கும் அதிகமான
எடை கொண்ட இராட்சத புள்ளிச்சுறா ஒன்று கரைஒதுங்கிய நிலையில் அதனக் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லும் முயற்சியில் கடற்படையினருடன் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று செவ்வாய்க்கிழமை(22) கரையொதுங்கியது.

கடலுக்குச் சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து கடற்கரையில் ஒதுங்கி தத்தளித்த குறித்த இராட்சத சுறா மீனை கடற்படையினருடன் இணைந்து யமக்களும் மீண்டும் ஆழ்கடலுக்கு இழுத்துச் சென்று பாதுகாப்பாக விட்டனர்.
மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் கடற்படையினரின் பல மணி நேர பிரயத்தனத்தின் பின்னர் குறித்த சுறா ஆழ் கடலுக்குள் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.