ஐக்கிய அரபு எமிரேட்ஸினால்

அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் என துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

எனவே, செல்லுபடியாகும் வீசா இல்லாத அல்லது விமான வீசா இல்லாத இலங்கையர்கள், இம்மாதம் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கைக்கு செல்ல விரும்பினால், தற்காலிக பயண ஆவணத்துக்கு (TTD) விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கிய வெளியேறும் சான்றிதழை வழங்கப்படும்

இந்த பொது மன்னிப்புக் காலத்தில், உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு துணைத் தூதரகம் உறுதிபூண்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள், பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி சட்டபூர்வ விசாவைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் அவ்வாறு செய்ய முடியாத இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பாக இலங்கைக்கு திரும்புமாறு துணைத் தூதரகம் மேலும் கேட்டுக் கொள்கிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி