leader eng

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன்

பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் எனவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சாதாரண கடவுச்சீட்டைப் பெற வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர  தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இராஜதந்திர கடவுச்சீட்டுகள், கொடுப்பனவுகள், காப்புறுதி திட்டங்கள், தொலைபேசி கொடுப்பனவுகள் போன்ற சலுகைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
 
எவ்வாறாயினும் மாதிவெல வீடமைப்புத் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் பொதுத் தேர்தல் முடியும் வரை முன்னாள் எம்.பி.க்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
மேலும், அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ரிவோல்வர்களை மீள ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். 
 
தனிப்பட்ட துப்பாக்கிகளை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதியின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவற்றை வைத்திருக்க முடியும் என்று அவர் கூறினார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி