(பாறுக் ஷிஹான்)

ஐஸ் போதைப்பொருளுடன் கைது
செய்யப்பட்ட  சந்தேக நபர்   தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக  கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
 
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவில்  கடந்த வெள்ளிக்கிழமை (27) மாலை இரகசிய தகவல்  ஒன்றைத் தொடர்ந்து வீதி  ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான குழுவினர. சந்தேகத்துக்கிடமாக நடமாடிய  ஒருவரைக் கைது செய்து அவரிடம் மீட்கப்பட்ட  சான்றுப்பொருட்களுடன் இறக்காமம் பொலிஸாரிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர்.
 
ds 2
 
இவ்வாறு கைதானவர்  வரிப்பத்தான்சேனையை சேர்ந்த  4 பிள்ளைகளின் தந்தை என்பதுடன்  43 வயது மதிக்கத்தக்கவராவார். 
 
இவரிடமிருந்து 5 கிராம்  650  மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
 
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்  போதைப்பொருள் நுகர்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர் என விசாரணையில் இருந்து தெரியவந்தள்ளது. 
 
இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை   அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு அம்பாறை  மாவட்ட    உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான  சம்பத் குமாரஇஅசித ரணசூரிய  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான  அதிகாரிகள்  முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி