ஜனாதிபதித் தேர்தல் காலத்தில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கசினோ அனுமதிப்பத்திரம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதால் இதன் மூலம்  அரசாங்கத்துக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை  முன்வைத்து உயர. நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று இன்று (30) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மல்கலே சுஜாத தேரரினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

500 மில்லியன் ரூபாவுக்கு கசினோ அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாகவும் இதனால் அரசாங்கத்துக்கு 85 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நவீன் மாரப்பன, சட்டத்தரணிகளான கௌசல்யா மொல்லிகொட மற்றும் உச்சித விக்கிரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி