முப்படை மற்றும் பொலிஸாரை

விட்டு வெளியேறிய சுமார் 750 பேர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சில காலங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளதாகவும் இராணுவத்தை விட்டு வெளியேறியவர்களே அதிகளவான குற்றவாளிகள் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுக்திய  நடவடிக்கையில், சிரேஷ்ட அதிகாரிகளும்  பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். யுக்திய நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை அவதானித்தோம்.
 
அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
 
சட்ட அமுலாக்கம், போதைப்பொருள் சோதனைகள் மற்றும் குற்றவாளிகளைக் கைது செய்தல் ஆகியவை பொலிஸ் நிலையங்களால் தொடர்ந்து  முன்னெடுக்கப்படுகின்றன. 
 
மற்றைய கடமைகளில் பணியாற்றிய அதிகாரிகளும் இந்த நோக்கத்துக்காக பணிக்கமர்த்தப்படுவார்கள். எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகளை அதிக திறனுடன் அவர்கள் மேற்கொள்வார்கள்.
 
பொலிஸ் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. இதனாலேயே தற்போது, ​​வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி