இலங்கையின் அரசியலில்

துணிந்து கருத்துக்களால் எதனையும் எதிர் கொள்ளக் கூடிய அரசியல்வாதியான குமார வெல்கமவின் இழப்பு தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும்,சக பாராளுமன்ற உறுப்பினருமாகிய குமார வெல்கம  மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியதுடன், அந்தப் பிரதேசத்த்தில் வாழும் மூவின மக்களினாலும் விரும்பக் கூடியவராக இருந்து வந்துள்ளார்.
 
இதேவேளை முஸ்லிpம்கள் செறிந்துவாழும் வெலிகம பகுதி மக்களின் அதிகப்படியான வாக்குகள் கடந்த தேர்தல்களில் குமார வெல்கமவுக்கு அளிக்கப்பட்டமையானது,அப்பிரதேச முஸ்லிம்களுடன் அவருடைய இணக்கத்தை எடுத்துகாட்டுகிறது.
 
மக்களின் நன்மைக்காக தான் வகிக்கும் அமைச்சுப் பதவியைக் கூட விட்டு சாதாராண பாராளுமன்ற உறுப்பினராக இருந்து துணிந்தும்,அச்சமின்றியும் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் தமது ஆழமான கருத்தை தெரிவித்துவந்த ஒரு அரசியல்வாதியாக அமரர் குமார வெல்கமவை காணமுடியும். 
 
குமார வெல்கம சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தமது 74 வயதில் மரணமாகியுள்ளார். 
 
அன்னாரது இழப்பினால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினர்கள்,மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு தனது ஆழ்ந்த கவலையினை தெரிவிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி