ஜனாதிபதி செயலகத்தை

சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த வாகனங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியின்போது கருத்து தெரிவிக்கும் போதே தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
வாகனங்களை ஏலம் விட்டதன் பின்னர் அரச அதிகாரிகள் முச்சக்கர வண்டிகளை தமது கடமைகளுக்கு பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
“வாகனங்களைக் காண்பிப்பதில் எனக்கு ஒரு சிறிய மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைக்கிறேன். 2015ஆம் ஆண்டு ஜோன் அமரதுங்க காலி முகத்திடலுக்கு வந்து கார் ஷோ நடத்தினார். 
 
இந்த வாகனங்களை பொதுப் பணித்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த வாகனங்களை ஏலமிட்டு பணத்தை திறைசேரிக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன். பின்னர் முச்சக்கர வண்டிகளில் சென்று அரசாங்க அதிகாரிகளை வேலை செய்யச் சொல்லுங்கள்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி