(பாறுக் ஷிஹான்)

ஐந்து அம்சக் கோரிக்கைகளை
முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின்  37 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று (26) மாலை  அம்பாறை மாவட்டத்தில்  அனுஷ்டிக்கப்பட்டது.
 
குறித்த நிகழ்வு  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும்  முன்னாள் தவிசாளருமான  கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்   தலைமையில் காரைதீவு அலுவலகத்தில்  இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் திலீபனின் உருவப்படத்துக்கு  மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் தமிழரசு கட்சியின்  உறுப்பினர்கள்  மற்றும் கட்சி ஆதரவாளர்கள்  உறுப்பினர்கள் என  பலரும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.
 
வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி சாவைத் தழுவிக் கொண்டார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி