ஐக்கிய மக்கள் சக்தியின் சர்வதேச

பெண்கள் அமைப்பாளரும், ஊடகவியலாளருமான சுரங்கி கொடித்துவக்கு, அந்தப் பதவியை இராஜினாமா செய்வதாக சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமக்கு அந்தப் பதவியை வழங்கிய கடசியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் உயர் முக்கியஸ்தர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலரால் அவமானப்படுத்தப்பட்ட போதிலும், கட்சியின் தொலைநோக்கு, கொள்கைகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மீதான நம்பிக்கையின் அடிப்படையில  சஜித் பிரேமதாசவுக்காக சேவையாற்றியதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கட்சி மீதான நம்பிக்கையை மீறியமை மற்றும் மக்கள் கோரும் உண்மையான முறைமை மாற்றம் நடைமுறையில் இல்லாத காரணத்தினால் பதவியை இராஜினாமா செய்வதாக  சுரங்கி கொடிதுவாக்கு கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க சஜித் பிரேமதாச மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனது சொந்த விருப்பத்தின் பேரில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், நாட்டுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு பணிக்காகவும் நான் தயங்கமாட்டேன் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி