leader eng

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், எம். ஏ. சுமந்திரன், பாட்டலி சம்பிக ரணவக்க ஆகியோரும் வேறு சிலரும் உயர் நீதிமன்றத்தில் வீ எப்  எஸ்  ஈ- வீசா மோசடி தொடர்பில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில்,முறைகேடான இலத்திரனியல் வீசா தொடர்பாக,அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கு எதிராக. உயர் நீதிமன்றம் விதித்திருந்த  இடை காலத் தடை உத்தரவை அமுல் படுத்தத் தவறியதால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திறகாக குடி வரவு குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 22ம் திகதி , வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் வரை விளக்க மறியலில் வைக்குமாறு உயர் நீதி மன்றம் புதன் கிழமை பிற்பகல் (25)உத்தரவிட்டுத்  தீர்ப்பளித்தது.

நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன,அச்சல வெங்கப்புலி,குமுதினி விக்கிரமசிங்ஹ ஆகியோர் முன்னிலையில் உயர் நீதீமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு  வருகின்றது.
 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்  மூவரும்  தாமாகவே இந்த வழக்கில்  வாதாடி வருகின்றனர்.வேறு தரப்பிருக்காக
 
பிரஸ்தாப தீர்ப்பு , தங்கள் "எஜமானர்" களாகிய  அமைச்சர்களுக்கு அடிபணிந்து சேவகம் புரியும் ஏனைய அரச அதிகாரிகளுக்கும் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் பொழுது சுட்டிக்காட்டினர்.
 
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ,  அங்கிருந்து ,குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைப்பதற்காக ,சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.
 
இந்த பாரிய வீசா மோசடி பற்றி அண்மைக் காலமாக பாராளுமன்றத்திலும்,பொது வெளியிலும் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.மேற்படி மனுதாரர்கள் மூவரும் கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற நிதிக்குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி