leader eng

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று

மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போது நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் பொலிஸாரையும் ஆயுதப் படைகளையும் இணைத்து 'அவசர திட்டத்தை' தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .

அவசர நிலை ஏற்படக் கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின்போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியமையே இதற்கான காரணமாகும்.

அப்போது முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதன்படி, எந்தவொரு அவசர நிலையிலும் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை நிலை நிறுத்துவது குறித்தும், அவசரநிலையில் இராணுவம் தனது அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

முப்படை தளபதிகள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் அவசரகால பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, படைத் தளபதிகளின் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டமும் நடத்தப்படவுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி