leader eng

ஜனாதிபதித் தேர்தலில்

போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களில், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அநுரகுமார திஸாநாயக்காவுக்காக அதிக எண்ணிக்கையிலான கட்சி அலுவலகங்களை நிறுவப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்காக நாடு முழுவதும் 4,980 கட்சி அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
மேலும், ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்காக நாடு முழுவதும் 1,013 கட்சி அலுவலகங்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்காக நாடு முழுவதும் 3,872 கட்சி அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அதன்படி, மூன்று முக்கிய வேட்பாளர்களுக்காக நாடு முழுவதும் சுமார் பத்தாயிரம் கட்சி அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
 
 பெரும்பாலான கட்சி அலுவலகங்கள் மேல் மாகாணத்தில் அமைந்துள்ளன. அடுத்த அதிக எண்ணிக்கையிலான கட்சி அலுவலகங்கள் தென் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ளன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி