leader eng

மறைந்த மாகாண அமைச்சர்

பி.பி.திஸாநாயக்கவின் மகளான 44 வயதுடைய பெண் ஒருவர் அக்குரஸ்ஸ, கலன்பிந்துனுவெவ பகுதியில் வைத்து அவரது வீட்டில் 28 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது் இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அரசியல்வாதியான பி.பி.திஸாநாயக்க 2000 ஆம் ஆண்டு காலமானார். அண்மையில், அவரது 11 வயதான பேரன்  வெடிமருந்துகள் வைத்திருந்தபோது அவரது வகுப்பாசிரியர் அதிபரிடம் தெரிவித்து பொலிஸாருக்கு வழங்கப்பட தகவலில் குறித்த மாணவன் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
 
இதன்போது மாணவன் வழங்கிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, கலென்பிந்துனுவெவ பொலிஸார் வீட்டைச் சுற்றிவளைத்ததில், 17  T-56 ரவைகள், 9mm 10 ரவைகள் மற்றும் ஏனைய துப்பாக்கிகளுக்கான பல்வேறு தோட்டாக்கள் உள்ளிட்ட தோட்டாக்களைக் கைப்பற்றினர். இந்த வெடிமருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த்தாக தெரிய வந்துள்ளது.
 
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  குறித்த பெண் நாளை 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி