leader eng

விமானப்படை வீர்ர ஒருவரைக்

கடத்திய சம்பவம் தொடர்பில் தந்தை மற்றும் மகன் இருவரையும் புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சீனன்குடா துறைமுக விமானப்படை தளத்தின் இராணுவ வீரரும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் வரக்காபொல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

குறித்த இராணுவ வீரர் பலாவிய விமானப்படை தளத்தில் பணிபுரிய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதே இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடத்தப்பட்ட விமானப்படை  வீரர் தப்பிச் சென்று சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாரிடம் விளக்கமளித்துள்ளார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் தான் வீதியைக் கடக்கும் போது முகத்தில் கைக்குட்டையை வைத்து மயக்கமடையச் செய்து தன்னை வெறிச்சோடிய வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார்.

எனினும் அதிலிருந்து தானே தப்பித்ததாக அவர் மேலும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி