leader eng

பிள்ளையை பாடசாலையில்

அனுமதிப்பதற்காக 20 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரிய கொழும்பு றோயல் கல்லூரியின் காவலாளி உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இன்று (06) உத்தரவிட்டார்.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள்,  நுகேகொட அனுலாதேவி மகளிர் கல்லூரியில் பிள்ளை ஒன்றை அனுமதிப்பதற்காக  முறைப்பாட்டாளரிடம் பணம் கோரப்பட்டது.

பின்னர் பிள்ளையை அனுலா கல்லூரியில் சேர்க்காமல் சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் சேர்க்கலாம் எனவும் அதற்கு 20 இலட்சம் ரூபா செலவாகும் எனவும் கூறி சந்தேக நபர்கள் அதற்கான முற்பணத்தை பெற்றுக்கொண்ட போது கைது செய்யப்பட்டதாகத்  தெரிவித்தனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி