leader eng

மியன்மாரில் உள்ள முகாம்களில்

இணைய குற்றங்களுக்கு பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்ட 20 இலங்கையர்கள் நேற்று (05) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இக்குழுவில் 16 ஆண்களும் 04 இளம் பெண்களும் உள்ளனர்.
 
சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான நிறுவனம் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர தலையிட்டது.
 
இவர்கள் மியான்மரில் இருந்து தாய்லாந்துக்கு அழைத்து வரப்பட்டு நேற்று (05) இரவு 11.09 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து தாய் எயார்வேஸின் TG-307 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
 
குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆட்கடத்தல், மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வாக்குமூலம் மற்றும் விசாரணைகளை எதிர்பார்த்து அவர்களை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி