leader eng

இரகசியமாக வைக்கப்பட்டிருந்த

ரணில்-அநுர நட்புறவு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் கூறுகிறார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'ரணிலுவும் அநுரவும் இன்று ஒரே கதையைச் சொல்கிறார்கள். ரணிலின் கருத்தையே அநுர கூறுகிறார். ரணிலின் வேலைத்திட்டத்தை அநுர முன்னோக்கி கொண்டு செல்வார் என்பது இந்த இடத்தில் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

மஹியங்கனையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து அவர் நிச்சயமாக தோற்கடிக்கப்படுவார் என்பதை உணர்த்துகிறது. அதேபோன்று சஜித்தை தோற்கடிக்க ஜனாதிபதி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய தயார் என்பதும் நிரூபணமாகி வருகிறது.

அநுரா வெற்றி பெறுவார் என்று போட்டியாளர்கள் பல்வேறு கூட்டுச் செய்திகளை உருவாக்கி வருவதற்கு நான் முற்றிலும் எதிரானவன். இரகசிய கொடுக்கல் வாங்கல்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி மக்களின் உரிமைகளுக்காக நான் நின்றதால் வீண் அவதூறு பிரசாரங்களை ரணில் அனுரவின் சங்கம் முன்னெடுத்துள்ளது.

ஆனால் என் கைகள் அழுக்காகவில்லை. என் கைகள் சுத்தமாக இருக்கின்றன. ரணிலும் அநுரவும் எமது வெற்றியின் மீது வெறி கொண்டுதான் இவற்றையெல்லாம் செய்கிறார்கள்.

அநுர, விஜித, கலப்பதி, நளிந்த அனைவரும் கார் பெர்மிட் பெற்றிருக்கிறார்கள் என நான் சவால் விடுகிறேன்..? இல்லை என்று கூறுங்கள். 

ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து எந்த வித சலுகையும் பெறவில்லை. எவ்வாறாயினும் ரணில் அரசாங்கம் வழங்கிய வாகனங்களை எடுத்துச் சென்றதா இல்லையா என்பதை ஜேவிபி உறுப்பினர்கள் தயக்கமின்றி அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி