leader eng

நடிகரும் அரசியல்வாதியுமான

உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட   சம்பவத்துக்கு உதவிய  அநுராதபுரம் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏஎஸ்பி) சஞ்சீவ மஹாநாமவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளின்படி முன்னாள் எம்.பி முன்னாள் பொலிஸ் அத்தியட்சகருடன் சேர்ந்து இந்த சம்பவத்தை திட்டமிட்டுள்ளார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காரின் கண்ணாடி சேதமடைந்தது, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் காயமடையவில்லை.
 
இச்சம்பவத்தையடுத்து, பொலிஸ் திணைக்களத்தின் முறையான அனுமதியின்றி  பொலிஸ் அத்தியடசகர் மஹாநாமா நாட்டை விட்டு வெளியேறியதையடுத்து, இது தொடர்பாக தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
 
இந்நிலையிலேயே மாலபே பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் ஏ.எஸ்.பி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி