leader eng

ஐக்கிய மக்கள் சக்தியின்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேசிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இப் புகைப்படம் X மற்றும் YOUTUBE தளங்களில் பகிரப்பட்டிருப்பதால் factseeker இதனை ஆராய்ந்தபோது, இந்த புகைப்படம் ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்ட போது தலதா மாளிகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என அறியமுடிந்தது.
 
IMG 20240904 130102 800 x 533 pixel
 
இப்புகைப்படம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் காணக்கூடியதாக இருந்தது.
 
 
அதேபோல், தேசிய பத்திரிகைகளிலும் இப்புகைப்படத்தை காண முடிந்தது.
 
IMG 20240904 130042 800 x 533 pixel
 
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்திருப்பது போன்ற சமூக வலைதளங்களில்  பகிரப்படும் புகைப்படம் திரிபுபடுத்தப்பட்ட புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி