leader eng

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக

செயற்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர், முடிந்தால் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் மேலும் கருத்து தெரிவித்த அருந்திக பெர்னாண்டோ,

இன்று அரச அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்கப் போகிறார்கள். 14 இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் உள்ளனர். அரச உத்தியோகத்தர்களின் தலைகள் முற்றாக கழுவப்பட்டு அரச ஊழியர்கள் மத்தியில் பொய்கள் விதைக்கப்பட்டுள்ளன.

1971 மற்றும் 1989 இல் இந்த நாட்டில் இரண்டு கிளர்ச்சிகள் நடந்தன. குறிப்பாக 89 காலப் பகுதியில் 60,000 இளைஞர்கள் அழிந்தனர், அதேபோன்று ஒரு இளைஞர் குழு நாட்டை ஒரு அழிவுகரமான இடத்துக்கு கொண்டு சென்றது சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்கள் அழிக்கப்படுகிறார்கள் 

கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன், இன்றிலிருந்து ஒரு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்தப் புனிதமற்ற அமைப்பைத் தோற்கடிக்கக்கூடிய யாருடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்துவேன்” என்றார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி