leader eng

மத்திய மாகாண முன்னாள்

ஆளுநர் நிலுகா ஏகநாயக்கவின் கணவர் நுவரெலியா பிரதேச செயலாளருக்கு நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவில் காணி வழங்குமாறு மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரதேச செயலாளர் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
 
நிலுகா ஏகநாயக்க மத்திய மாகாண ஆளுநராக இருந்தபோது, ​​நுவரெலியா கிரிகோரி ஏரிக்கு அருகில் உள்ள அரச காணியொன்று பின்னர் அனுமதியின்றி கையகப்படுத்தப்பட்டு, நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் மேயர் ஒருவருக்கு அந்த காணியை விற்றுள்ளனர்.
 
அந்தக் காணிக்கு பதிலாக அம்பேவெல பிரதேசத்தில் உள்ள ஒரு ஏக்கர் அரச காணியை வழங்குமாறு முன்னாள் ஆளுநரின் கணவர் நுவரெலியா பிரதேச செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
 
ஆனால் உரிய காணி கிடைக்காத காரணத்தினால் முன்னாள் ஆளுநரின் கணவர் பிரதேச செயலாளருக்கு தொலைபேசியில் 21 ஆம் திகதிக்கு பின்னர் பார்போம் எனக் கூறி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி