leader eng

குற்றப்புலனாய்வு திணைக்கள

அதிகாரிகளினால் இன்று (29)  துபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கீத்மல் பெனோய் தொடர்பில் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராக கருதப்படும் இவருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிவப்பு நோட்டீஸ் பிறப்பித்திருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கித்துல்கடவல கந்த, அகலவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவராவார்.

கொலை முயற்சி, கடத்தல் மற்றும் ஹெரோயின் வைத்திருந்தமை தொடர்பான பல வழக்குகளுக்காக இந்தச் சந்தேக நபருக்கு எதிராக மத்துகம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தேக நபர் பாதாள உலகக் குழுத் தலைவரான மத்துகம ஷானின் சகா என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி