leader eng

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்

உறுப்பினர் உதித் லொக்குபண்டார நேற்று (28) பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றுக்காக வந்திருந்தார்.

இது குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டபோது உதித லொகுபண்டார ஊடகவியலாளர்களை விட்டு விட்டு ஓடியதையும் காண முடிந்தது.
 
உதித் லொக்குபண்டார, முன்னாள் சபாநாயகரும் பரோபகார அரசியல்வாதியுமான வி.ஜெ.மு லொக்குபண்டாரவின் இரண்டாவது மகனும், 2009 இல் பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு 2015 வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவருமாவார்.
 
2015 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்க்ஷவின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றினார்.
 
அப்போது உதித் லொக்குபண்டாரவை ‘முட்டாள் பிசாசு’ என மகிந்த ராஜபக்க்ஷ ஊடகங்கள் முன் திட்டியதுடன் அது பெரும் ஊடக விளம்பரத்தையும் பெற்றது.
 
எனினும், மஹிந்த ராஜபக்க்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர், பிரதமரின் பாராளுமன்ற விவகார செயலாளராக உதித் லொக்குபண்டார நியமிக்கப்பட்டார்.
 
தானியங்கி வங்கி அட்டையைப் பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான கணக்கிலிருந்து சுமார் 30 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக அப்போது அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி