leader eng

சஜித் பிரேமதாச ஜனாதிபதித்

தேர்தலில் வெற்றி பெற்றால், நாடு அவரால் ஆளப்படாமல், அவரது மனைவி மற்றும்  "பிரேமதாச" குடும்ப குடும்பதினாலேயே ஆளப்படும்.

இவ்வாறு தெரிவிக்கிறார் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சபிக்கப்பட்ட குடும்ப ஆட்சியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் நாட்டின் அரசியலில் பலராலும் தவறவிட்ட ஜனநாயகத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்றும் அமைச்சர் கூறினார்.

குடும்ப ஆட்சி ஒரு நாட்டுக்கு சாபம். குடும்ப ஆட்சியில் எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை என குடும்ப ஆட்சி பற்றி பேசும்போது அனைவரும் ராஜபக்க்ஷ குடும்ப ஆட்சி பற்றி பேசுகிறார்கள்.

ஆனால், பிரேமதாச குடும்ப ஆட்சி பற்றி பேசப்படுவது குறைவாகவே உள்ளது. சஜித் 2019 இல் வீடமைப்பு அமைச்சராக இருந்தார். அப்போது, ​​வீடமைப்பு அமைச்சில் அமைச்சர் சஜித் சுறுசுறுப்பாக இருக்கவில்லை. இவரது மனைவி ஜலானி பிரேமதாசவே அனைத்தையும் கையாண்டார் எனவும் அவர் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி