இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 3 சத வீதமாக இருக்கும்

என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (09) காலை திடீரென பாராளுமன்றத்துக்கு வந்த ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனைத் தெரிவித்தார்.
பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான முன்னறிவிப்புகளை முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போது, ​​நாட்டின் பணவீக்கம் 1.5% ஆகக் குறைந்துள்ளது மற்றும் பல ஆண்டுகளாக பற்றாக்குறையில் இருந்த முதன்மைக் கணக்கு இருப்பு, 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத உபரியாக மாற்ற முடிந்தது.

ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அமெரிக்க டொலரின் மாற்று மதிப்பு அந்நிய செலாவணி கையிருப்பு 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சவாலான, கடினமான ஆனால் சரியான பாதையை பின்பற்றியதன் காரணமாகவே இந்த நிலையை அடைய முடிந்தது.

“நரகத்தில் வீழ்ந்த நாட்டை மீட்க முடியும்” என்ற நம்பிக்கை தமக்கு இருந்ததாலேயே தாம் நாட்டைப் பொறுப்பேற்றேன்.
மூன்று முதன்மைத் துறைகளின் ஊடாக கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, முதலாவது உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதாகவும் கூறினார்.இப்பணிகள் 2023 இல் நிறைவடையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரண்டாவதாக, வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் மூலம் உத்தியோகபூர்வமாக பெறப்பட்ட கடனை மறுசீரமைப்பது, 2023 நவம்பருக்குள் இது தொடர்பான கொள்கை உடன்படிக்கையை எட்டியதாக ஜனாதிபதி கூறினார்.
கடன் வழங்கும் நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது மாத்திரமே இந்த விடயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவுடன் வரைவுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கலந்துரையாடி வருவகிறது.
வர்த்தகக் கடன் மறுசீரமைப்பு மூன்றாவது துறை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த வருடத்தின் நடுப்பகுதிக்குள் அனைத்துப் பேச்சுவார்த்தைகளையும் முடிப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்த ஜனாதிபதி, 2032 ஆம் ஆண்டளவில் மொத்தக் கடன் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95% ஆகக் குறைப்பதே கடன் மறுசீரமைப்பின் இறுதி இலக்கு எனவும் தெரிவித்தார்.

இந்த இலக்குகளை அடைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, அந்த இலக்குகளை அடைவதே தற்போதைய சவாலாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
ஊழல் ஒழிப்பு வரைவுக்கு அமைச்சர்வையின அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி