இன்று (26) அதிகாலை மாங்குளம் வசந்தநகரில் இராணுவ கெப் வண்டி மீது லொறி மோதியதில் இலங்கை இராணுவ வீரர் ஒருவர்

உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கெப் வாகனம் முன் நோக்கி முற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கப் வாகனம் திடிரென இயங்காமல் நின்றுள்ளது. எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி விடும் எனும் அச்சத்தில் விபத்தை தருக்கும் நோக்குடன் சாரதி பாரஊர்தியை செலுத்த முற்பட்டுள்ளார்.

இதன்போது, கப் வாகனத்தில் பாரஊர்தி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துள்ளனர்.

அதில் ஒருவர் மேல் பாரஊர்தி ஏறியதில் குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்தவர்கள், இரணைமடுவில் உள்ள இராணுவ வைத்தியசாலையிலும் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

01 WhatsApp Tamil 350


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி