யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது  அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய ஐந்து மாவட்டங்களிலும் முன்னர் குறிப்பிட்டது போன்று நாளை காலை மாலை 6 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் இரண்டு மதியம் 2 மணிக்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு மீள அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி