பாராளுமன்ற உறுப்பினர்களால் தையிட்டி விகாரை முற்றுகை!
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து இன்றைய தினம் கூட்டாக வெளிநடப்பு செய்த பாராளுமன்ற
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து இன்றைய தினம் கூட்டாக வெளிநடப்பு செய்த பாராளுமன்ற
நாட்டில் பரவி வரும் புதிய டெங்கு பிறழ்வால், எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஸ்ரீ
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தின் போது நிதியமைச்சரின் கடமைகளை
யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட
மழையுடனான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும்
ட்ரோன் விமானம் மூலமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை உக்ரைன் கொல்ல முயற்சிப்பதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம்
4 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
கொழும்பு பங்குச் சந்தை நாளை (04) நண்பகல் 12 மணிக்கு மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.
லண்டனில் நடைபெறவுள்ள மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04)
World Bank என அழைக்கப்படும் உலக வங்கியின் புதிய தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் ஜூன் 2 ஆம் திகதியில் இருந்து அந்த பொறுப்பில் செயல்பட உள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக எப்போதும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் தான் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதாவது சர்வதேசய நாணய நிதியத்தின் தலைவராக தொன்றுதொட்டு ஐரோப்பியாவை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவது போல் உலக வங்கியின் தலைவர் நியமனத்தில் இப்படி ஒரு நடைமுறை உள்ளது.
இந்த உலக வங்கியின் தலைவராக தற்போது டேவிட் மல்பாஸ் உள்ளார். உலக வங்கி என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். இதன் நோக்கம் என்பது வளரும் நாடுகளில் நிலவும் வறுமையை குறைப்பதாகும். அதோடு வெளி முதலீடு, சர்வதேச வணிகங்களை உருவாக்கி கொடுப்பதிலும் உலக வங்கியின் முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்நிலையில் தான் டேவிட் மல்பாஸ் உலக வங்கியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். அவரது பதவிக்காலம் முடியும் முன்பே அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார். வரும் ஜூன் 1 ஆம் திகதியுன் டேவிட் மல்பஸ் தனது பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறார்.
இதனால் உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பரிந்துரைத்தார். மேலும் அஜய் பங்கா சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில் தான் உலக வங்கி தலைவர் பொறுப்புக்கு தனக்கு ஆதரவு கோரும்படி பல நாடுகளுக்கு சென்று பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு கேட்டு வந்தார்.
கடந்த சில வாரங்களில் மட்டும் 96 அரசு பிரதிநிதிகளை அஜய் பங்கா சந்தித்தார். இதற்காக 3 வாரங்களில் 8 நாடுகளுக்கு 63,643 கிலோமீட்டர் தொலைவு பயணித்து ஆதரவு கோரினார். இதை அடுத்து அஜய் பங்கா குறித்து பலகட்டமாக ஆலோசனைகள் நடந்தன. நேற்று முன்தினம் 4 மணிநேரம் வரை அஜய் பங்காவிடம் நேர்க்காணல் செய்யப்பட்டது.
இது உலக வங்கியின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அஜய் பங்காவை உலக வங்கியின் தலைவராக்க 25 உறுப்பினர்கள் கொண்ட குழு அங்கீகரித்துள்ளது. அதாவது உலக வங்கியின் 25 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழு அடுத்த 5 ஆண்டுக்கான தலைவராக அவரை அங்கீகரித்துள்ளது.
அதாவது 25 உறுப்பினர்களில் ரஷ்யா புறக்கணித்த நிலையில் பிற 24 உறுப்பினர்கள் அஜய் பங்காவுக்கு ஆதரவு ஓட்டளித்துள்ளனர். இதன்மூலம் இந்திய வம்சாவளியான அஜய் பங்கா உலக வங்கி தலைவராக பொறுப்பேற்பது உறுதியாகி உள்ளது.
தற்போதைய உலக வங்கி தலைவர் டேவிட் மால்பஸ் ஜூன் 1 ஆம் திகதி வரை பணியில் இருப்பார். இதனால் ஜூன் 2 ஆம் திகதி முதல் உலக வங்கி தலைவராக அஜய் பங்கா செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ
52 உயர்தரப் பரீட்சை பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு போதுமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள்
மக நெகும திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கலைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன