leader eng

நேற்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து பொதுஜன பெரமுன சமூக வலைத்தளங்களில் அதனது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

நாட்டைக்காக்கும் மக்கள் நாட்டின் அபிவிருத்தி பாதையில் நாங்கள் நாட்டில் நேசிக்கும் மனிதர்கள் என்ற கோசத்தை முன்வைத்துள்ளனர்.

campaign

கடந்த ஜனாதிபதித்தேர்தலின் போது மேற்கொண்ட பிரச்சாரங்களைப்போன்று இம்முறையும் பொதுத்தேர்தலில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது. இந்த நடவடிக்கைகளை பிரதமர் மகிந்த ராஜபக்ச மகன் ஜோசித ராஜபக்ச ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.

வேளை செய்யும் நாட்டிற்கு சேவை செய்த ஒருவர் எனும் கோசத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பாக வீடியோ ஒன்றை ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே வெளியிட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து  அவரது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

mahindananda 2020

அரசாங்க கட்சியில் இருப்பவர்கள் தேர்தல் சம்பந்தமாக இப்படி அறிக்கை விட்டிருக்கும் நிலையில் ஐ.தே.க சமகி ஜனபல வேகய என்ற முன்னியை உருவாக்கியுள்ளது எந்தச்சின்னதில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2020 பொதுத்தேர்தலில் போட்டியிடும் முகமாக கடந்த 29ம் திகதி தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர்கள்  சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Screen Shot 2020 02 29 at 11.18.48 AM

மங்கள சமரவீர ஐக்கிய தேசியம் மங்கள எனும் சுலோகத்தின் கீழ் போட்டியிடுகின்றார்.

    


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி