leader eng

ராஜபக்ஷ அரசாங்கத்தின் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களுக்காக ஐ. தே. க. இரண்டாக உடைக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (1) ஐ. தே. க. தலைமைகாரியாலயத்தில் நடந்த நிருவாகக் குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பல மாதங்கள் முயற்சி செய்து கூட்டணி ஒன்றை அமைத்தோம் ஆனால் சிலர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு கட்சியையும் கூட்டணியையும் இரண்டாக உடைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவை பார்த்து நீங்களும் இந்த சதிகார வேலையை செய்பவர்களில் ஒருவர் என மங்கள குறிப்பிட்டுள்ளார்.

1977-1994 வரைக்கும் அதாவது 17 வருடங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி எதிர்க்கட்சியில் இருந்தது அதே போன்று ஐ.தே.க இட்டுச் செல்ல சிலர் முயற்சிக்கின்றனர்.அதை முறியடித்து நாம் கட்சியை இக்கூட்டணி  ஊடாக வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்றார்.

சிறு சிறு காரணங்களுக்காக நாம் குழப்பமடைய தேவையில்லை என்று மங்கள சமரவீர  குறிப்பிட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் சமகி ஜன பலவேகய வின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எது எப்படி இருப்பினும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் தலைமையில் சமகி ஜன பலவேகயவில் போட்டியிடவுள்ளதாகவும் இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதகவும்  அவர் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி