பல வருடங்களாக எந்த போட்டியும் நடக்காது இருந்த சூரியவெவ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (26) இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இடம்பெற்றது.

இதன்போது விளையாட்டரங்கிற்கு வருகை தந்த பெருமளாவான கிரிக்கெட் ரசிகர்கள் மீது டிக்கெட் பெறும் இடத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் தான் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்பிக்குமாறு விளையாட்டு அமைச்சர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

100 நாட்கள் கழிந்தது இப்போதே இப்படி என்றால் ஆட்சி தொடர்ந்தால் சொல்லவா வேண்டும்!

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி