leader eng

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ´பிஎன்எஸ் திப்பு சுல்தான்´ (PNS TIPPU SULTAN) கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை
மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் நேற்று (18) காலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

´பிஎன்எஸ் திப்பு சுல்தான்´ கப்பல் 134.1 மீட்டர் நீளம் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரியாக கெப்டன் ஜவ்வாத் ஹுசைன் டிஐ (JAWWAD HUSSAIN TI) செயற்படுகிறாா்.

மேலும், கப்பல் நாட்டில் உள்ள காலப்பகுதியில் ​​இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையால் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, கப்பல் நாட்டின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக பல பகுதிகளுக்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி