leader eng

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான ஊடக நிறுவனம் ஒன்றின் மீது தாக்குதலை மேற்கொண்டு அதன் பொறுப்பை தமது அணிமீது  சுமத்துவதற்கான முயற்சியில் எதிர்தரப்பு ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் விரவங்ச கூறியுள்ளார்.  பொதுஜன பெரமுன

ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்நாட்களில், சில நேரங்களில் ஒரு நாளைக்கு பல தடவைகள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்தி நாட்டிற்கு கூறுவது அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக பல்வேறு பிரசார மற்றும் ஏனைய சதிகளையும் எதிர்தரப்பினர் செயற்படுத்தி வருகின்றார்கள் என்றேயாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கோட்டாபய பொறுப்புக் கூற வேண்டும் எனத் தெரிவிக்கும் வீடியோ ஒன்று தயாரிக்கப்படுவதாகவும், அது வெளியிடுவதற்கு தயாராக உள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் இதற்கு முன்னர் எதிர்த்தரப்பினரின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்வுகூறல்களைத் தெரிவித்து கூறியிருந்தனர்.

இந்த எதிர்வு கூறல்கள் தொடர்பில் சரியான உறுதியான தகவல்கள் இருக்குமாயின் ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்துவதை விட மொட்டு கட்சியினர் பொலிஸ் நிலையத்திலும், தேர்தல் ஆணைக்குழுவிடத்திலும் அல்லது தேர்தல் கண்காணிப்பு குழுவிடத்தில் முறைப்பாடு செய்திருக்கலாம்.

விமல் வீரவங்சவின் இந்தக் குற்றச்சாட்டு எனில் சேறுபூசும் வீடியோவை விட கடுமையான குற்றச்சாட்டாகும். தாக்குதல் மேற்கொள்ளப்படப் போகின்றது எனக் கூறுவது ஊடக நிறுவனம் ஒன்றின் மீதாகும். ஊடக நிறுவனத்திற்கோ அல்லது வேறு எந்த இடத்திற்கும் தாக்குதலை மேற்கொள்வது படு மோசமான செயற்பாடாகும்.

இந்தக் குற்றத்தைப் பற்றி விமல் வீரவங்சவுக்குத் தெரிந்த தகவல்களை உடனடியாக பொலிஸாருக்கு வழங்க வேண்டும். பொலிஸாரும் உடனடியாக இது தொடர்பில் அவரிடம் விசாரிக்க வேண்டும். அவ்வாறானதொரு குற்றம் இடம்பெற உள்ளதாயின் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விமல் வீரவங்க தெரிவித்திருப்பது தாக்குதல் எனக் கூறி நாட்டில் தீயை மூட்டுவதாயின் அது தொடர்பிலும் பொலிஸார் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி