இருநூற்றி இருபது இலட்சம் மக்களுடன் நிற்பதா அல்லது நாட்டை அழிக்கும் மொட்டு நிழல் அரசாங்கத்துடன் நிற்பதா என்பதை நாம்

தீர்மானிக்க வேண்டும் எனவும், பொய்யும் மோசடியும் நிறைந்த அரசாங்கத்துடன் கைகோர்க்க மனசாட்சியுள்ள எவராலும் முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் குடும்பத்தினருக்கும் பாராளுமன்றத்திற்கு வரமுடியாத போதிலும், நேற்றைய தினம் சட்டவிரோதமாக நடந்து கொண்ட ஒரு பொது மக்கள் பிரதிநிதிக்கு பாராளுமன்றத்திற்கு சமூகமளித்து வாக்களிக்கும் தகுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித தலைவர் தெரிவித்தார்.

மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர், மின்கட்டணம் அதகரிக்கப்பட்டுள்ள விதம் முற்றிலும் தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் உத்தரவிற்கு அமைவாக அமைச்சரவை எவ்வாறு விலையை அதிகரித்தது என்பதை விளக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்கு எதிராக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்ட நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி நீக்கம் தொடர்பான இன்றைய (24) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி