leader eng

கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அமெரிக்க குடியுரிமையினை விலக்கிக் கொள்ளப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் இதுவரை உள்ளடக்கப்படவில்லை

என இன்று புதன்கிழமை மீண்டும் ஒரு தடவை உறுதியாகியுள்ளது. இன்று தெரண ஊடகவியலாளர் இந்தீவரி மற்றும் அமெரிக்க தூதுவராலய பேச்சாளர் நென்சி வென்ஹோன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற நேர்காணலின் போதே இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ 2019ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கத் தூதரகத்தில் இரட்டைப் பிரஜா உரிமையினை நீக்கிக் கொள்வதற்கான சத்தியக்கடதாசியை ஒப்படைத்ததாக அமெரிக்க தூதுவராலய பேச்சாளர் இதற்கு முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் theleader.lk க்குத் தெரிய வரும் விடயம் யாதெனில், கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையினை விலக்கிக் கொள்வதற்குத் தேவையான ஆவணங்களை அமெரிக்க தூதரகத்தில் கடந்த செப்டெம்பர் மாதத்திலேயே ஒப்படைத்துள்ளார் என்பதாகும்.

இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நவம்பர் மாதத்தில் இடம்பெறப் போகின்றது என்பதை அறிந்து கொண்ட பின்னரும், அவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் வழங்கப்படும் என ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்கள் வழங்கிய இணக்கப்பாட்டையும் அடுத்தே அந்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர் நியமனம் கிடைக்காவிட்டால் தான் அமெரிக்க குடியுரிமையினை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் ராஜபக்ஷ குடும்பத்திடம் அழுத்தங்களைக் கொடுத்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி