பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றவர்களில் 10 பேர் அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக் பெற்றுக் கொண்டு வெளியேறியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் ஏதேனும் வைரஸ் நோய் பரவுகின்றதா என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பரிசோதகர்களுக்கு வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து இன்று வைத்தியசாலைக்கு சென்ற சுகாதார அதிகாரிகள் அங்கு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களின் இரத்த மாதிரிகளும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி