leader eng

கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் அமெரிக்க பிரஜையே என்றும், தற்செயலாக 16ம் திகதி அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்க பிரஜை ஒருவர்

இலங்கையின் ஜனாதிபதியாவது மாத்திரமின்றி, மெலேணியா ட்ரம்புக்குப் புறம்பாக மற்றொரு அமெரிக்க ஜனாதிபதி முதல் பெண்மனி கிடைக்கப் போவதாகவும், எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தனது அமெரிக்க குடியுரிமையினை விலக்கிக் கொண்ட சான்றிதழை நாட்டு மக்களுக்கு காட்டுமாறும் தான் கோட்டாபயவுக்குச் சவால் விடுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“இச்சந்தர்ப்பத்தில் அனைத்து இலங்கையர்களும் கவனத்திற் கொள்ள வேண்டியது MCC என்று மில்லேணியம் சேலேண்ஜ் ஒப்பந்தமன்றி, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஒரு பிரதான வேட்பாளர் இன்னமும் அமெரிக்க பிரஜா உரிமையினை விலக்கிக் கொள்ளாத நிலையில் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தொடர்ந்தும் அமெரிக்காவின் பிரஜைகளாகவே உள்ளார்கள் என்ற விடயத்தையேயாகும்.

அமெரிக்காவின் கடவுச் சீட்டைக் கொண்டவர் ஒருவர் அமெரிக்க குடியுரிமையினை உரிய முறையில் விலக்கிக் கொண்டால் ஐக்கிய அமெரிக்காவின் “தேசிய தன்மை இழப்புச் சான்றிதழ்” (Certificate of Loss Nationality) வுடன் அமெரிக்க திறைசேரியினால் அதனை அங்கீகரித்து வெளியிடப்படும் DS 4079 என்ற சான்றிதழும் அவரிடத்தில் இருக்க வேண்டும்.

2019ம் ஆண்டின் முதல் ஆறு மாத்தினுள் 1090 பேர் தமது குடியுரிமையினை விலக்கிக் கொண்டதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளது.  எவ்வாறாயினும் அமெரிக்கவின் 94 மாவட்ட நீதிமன்றங்கள் எதிலும் மேற்சொன்ன அங்கீகரிக்கப்பட்ட DS 4079 சான்றிதழ் கோட்டாபயவினால் சமர்ப்பிக்கப்படவில்லை.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி