பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையை

வெகுவிரைவில் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி, சுமார் 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து இன்று (12) பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

எதிர்ப்பு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறும், கறுப்பு கொடிகளை தாங்கியவாறும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பூண்டுலோயா, கிகிலியாமான 3ஆம் கட்டை பகுதியிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி, டன்சினன் காந்திபுரம், டன்சினன் மத்திய பிரிவு, டன்சினன் கீழ்பிரிவு, சீன் கீழ்பிரிவு ஊடாக பூண்டுலோயா பஸ் தரிப்பிடத்தை வந்தடைந்தது.

அதன்பின் அங்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு, போராட்ட ஏற்பாட்டுக்குழுவால் ஊடக சந்திப்பொன்றும் நடத்தப்பட்டது.

12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள், டன்சினன் பாதையின் விடியலுக்காக முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு முழு ஆதரவையும் வழங்கினர். மதகுருமார்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அத்தோடு, பூண்டுலோயா நகரங்களில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி