leader eng

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியேறுதல் தொடர்பாக இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களின்

படி ஏமாற்றுக்காரர்கள் மற்றும் முறையற்ற செயற்பாடுகள் என்பவற்றை  நிறுத்துவதற்கு குடியேறுதல் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் உடனடியாக டிஜிட்டல் மயப்படுத்த வேண்டுமெனவும் இதுவரை டிஜிட்டல் மயப்படுத்தப்படாது இருப்பதற்கான காரணம் என்ன எனக் கேட்டுக் கொள்வதாகவும் வெளிநாட்டுசக்தி அமைப்பு வேண்டி நிற்கின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியேறுதல் தொடர்பாக டிஜிற்றல் மயப்படுத்தப் படாதிருப்பதால் இதுவரை பலதரப்பட்ட ஏமாற்றுக்காரர்களுக்குத் தேவையான முறையில் இத்துறையில் செயல்படுவதற்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றது என வெளிநாட்டு சக்தி மேலும் வலியுறுத்துகின்றது.

கடந்த காலங்களில் விசிட் வீசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு கடந்து செல்லும் எண்ணிக்கையும் அதிவிரைவாக அதிகரித்துள்ளது.

விசிட் வீசா மூலம் தொழிலாளர்களை வேலைவாய்ப்புகளுக்கு அழைத்துச் செல்வது ஏமாற்றுக்காரர்களின் கைவசம் இருந்தமையால் இலங்கை நாட்டிலிருந்து தொழில்களுக்குச் செல்லும்  பெரும்பாலானோர் பல இன்னல்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.

வேலைவாய்ப்புகளுக்கு விசிட் வீசா மூலம் டுபாய் நாட்டுக்குச் சென்ற பல இளைஞர்களும் யுவதிகளும் தொழில் வாய்ப்புகள் கிடைக்காது தெருத் தெருவாக அலைந்து திரிந்து பல துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஓமான் மற்றும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் இராஜதந்திர உறவுகளில் கூட பாதிப்புகளை ஏற்படுத்தி இறுதியில்  கரும்புள்ளியாக அது மாறுமளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டமைக்கும் முக்கிய காரணம் இந்த டிஜிற்றல் மயப்படுத்தலில் இருந்து தூர விலகியிருந்தமையாகும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியேறுதல் தொடர்பான தகவல்களை ஒரு டிஜிட்டல் தளத்தில் ஒன்று சேர்க்க முடியுமானால் இவ்வகையான ஏமாற்றுக்காரர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும் என வெளிநாட்டு சக்தி நிறுவனம் வலியுறுத்திக் கூறுகின்றது.

எனவே இத்துறையை உடனடியாக டிஜிட்டல் மயப்படுத்த வேண்டுமெனவும் அதற்காக அரசதரப்பினர் தமது அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டுமெனவும் வெளிநாட்டு சக்தி நிறுவனம் மேலும் குறிப்பிடுகின்றது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி