2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க தற்போதைய மின்சாரச் சட்டத்தைத் திருத்துவதற்கான
சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தச் சட்டத்தைத் திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான முன்மொழிவை, ஏப்ரல் 1ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மின்சக்தி அமைச்சர் முன்வைத்தார்.
இதற்காக மின்சாரத் துறையின் 59 பங்குதாரர்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை, நிபுணர் குழு சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும், மின்சாரத் துறையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி வழங்கும் பங்குதாரர்களிடமிருந்தும், மின்துறையை மறுசீரமைப்பதில் ஆர்வமுள்ள பங்குதாரர்களிடமிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.