இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான

சந்திப்பின் போது, இந்தியப் பிரதமருக்கு சஜித் பிரேமதாச கையளித்த தனித்துவமான புகைப்படம், தற்போது வைரலாகியுள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பின்னர் தெரிவித்த குறிப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.

வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த "ஐ-ஒன்" (eye-one) என அழைக்கப்படும் பெண் சிறுத்தையின் இந்த சிறப்பு புகைப்படத்தை, 2025 ஏப்ரல் 5ஆம் திகதியான இன்று, இந்திய பிரதமர்  கௌரவ நரேந்திர மோடி அவர்களுக்கு கொழும்பில் வழங்குவது பெரும் கௌரவமாகும்.

ஒரு கண் பார்வை இழந்திருந்தாலும், காட்டின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழும் இந்த சிறப்பான விலங்கு - இலங்கையின் இயற்கை பாரம்பரியம் மற்றும் அழகின் உண்மையான சின்னமாகும்.

அதன் கவர்ச்சிகரமான நீல கண் சவால்களை எதிர்கொண்டு அதன் வாழ்க்கை பற்றிய நீண்ட கதையை சொல்கிறது - ஒருவேளை குளுகோமா (glaucoma), கெடரெக் (cataract), அல்லது ஏதாவது விபத்து காரணமாக ஏற்பட்ட நிலை - ஆனால் அது காட்டில் பாதுகாப்பாக உறுதியாக இருப்பது விலங்குலகின் சவால்களை வெற்றிகொள்வதற்கான சின்னமாகும்.

எவ்வாறாயினும், துரதிருஷ்டவசமாக இந்த சிறப்பு விலங்கு கடந்த சில ஆண்டுகளாக காணப்படவில்லை, மேலும் அது உயிருடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை ” என்று, அந்தப் பதிவில் சஜித் குறிப்பிட்டுள்ளார்.

 

WhatsApp-Image-2025-04-06-at-9.31.56-AM-1027x1536.jpeg

 

WhatsApp-Image-2025-04-05-at-6.30.50-PM-2.jpeg


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி