முதுகெலும்பிருந்தால் அரசியல் கைதிகளின் விடுதலையின் பின்னர் அவர்கள் இந்த

தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந்த் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

சிறைசாலைகளிலுள்ள அரசியல் கைதிகளை பார்ப்பதற்காக சென்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கைதிகள் சிறையில் உள்ளார்கள்.

இவர்களின் விடுதலை பற்றி தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருக்கின்றோம், ஆனால் இந்த அரசாங்கம் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளுடன் பல அரசியல் தோழர்கள் இந்த அரசியல் களத்தில் குதித்துள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னால் இருந்த ஜனாதிபதிகள் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியது போல, தற்போது பொது மன்னிப்பு வழங்க முடியாது என்றும் அதற்குரிய விதிமுறைகளை தாங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கதெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பது என்பது சாதாரணமான விடயம் அல்ல. தற்போது சிறையில் இருக்கின்ற எவரும் சந்தேகத்தின் பெயரில் இருப்பவர்கள் அல்ல. அனைவரும் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்கப்பட்டவர்கள்.

“எனவே அவர்களுக்கு இதற்கு முன் இருந்த ஜனாதிபதிகள் பொது மன்னிப்பு வழங்கியது போல் பொது மன்னிப்பு வழங்க முடியாது. உரிய நடைமுறைகளை நாங்கள் பின்பற்ற வேண்டும். அடுத்ததாக குறித்த சிறைகைதிகள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை.

“முன்னாள் ஜனாதிபதிகளுடைய கொலை திட்டமிடல்கள், பிலியந்தலை பேருந்து குண்டு வெடிப்பு, மத்திய வங்கி குண்டு வெடிப்பு, கண்டி தலதா மாளிகை குண்டு வெடிப்பு, போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர்.

“எனவே அவர்களை விடுதலை செய்வது என்பது இலகுவான விடயமல்ல. அதேபோல் இவர்களை விடுதலை செய்து சமூகத்தில் ஒற்றுமைப்படுத்துவதே ஒழிய இவர்களை வைத்து அரசியல் செய்ய எவருக்கும் இடம் கொடுத்து விடவும் கூடாது.

“தற்போது ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சிற்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் இவர்கள் பற்றிய அறிக்கை ஒன்றை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது”  என குறிப்பிட்டுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி