"மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி

அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான முதலாவது பிரச்சார கூட்டம் கொட்டகலையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

'மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி முன்னர் பேசிய விடயங்களை தீர்ப்பதற்கு ஜனாதிபதி இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பள பிரச்சினையும் தீரவில்லை. எனவே, இது தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும், விழிப்படைய வைக்க வேண்டும்.

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு பற்றி தற்போது பேசப்படுகின்றது. ஜே.வி.பியின் 54 தொழிற்சாலைகளை எரித்தனர், பல உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, மலையக மக்கள் பட்ட துன்பங்கள் தொடர்பிலும் ஆணைக்குழு வேண்டும்.

இந்நாட்டில் போரின் போதும், ஜே.வி.பி. கலவரத்தின் போது எமது மக்கள்தான் கொழுந்து எடுத்து நாட்டுக்கு வருமானம் உழைத்து கொடுத்தனர். கொரோனா காலத்தில்கூட உழைத்தனர். எனவே, எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி பெரும்பான்மையை பெறும்." - என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி