மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் இன்று (30) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்னர் கோறைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதி கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அண்மையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் தாக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை அச்சுறுத்தலின்றி மேற்கொள்ள வேண்டியும், தாக்கியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

(எச்.எம்.எம். பர்ஸான்)

WhatsApp_Image_2024-12-30_at_11.22.19_AM.jpeg

 

WhatsApp_Image_2024-12-30_at_11.22.18_AM.jpeg


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி