ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது.
ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்கின்றார்.

இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை குழுவினர் பேச்சு நடத்தவுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை, கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

பாரத பிரதமருடனான சந்திப்பின்போது மலையகம் - 200 தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மலையகம் - 200 நிகழ்வுக்கு இந்திய பிரதிநிதிகளை அழைப்பதற்கான கோரிக்கையும் விடுக்கப்படும் என தெரியவருகின்றது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி