leader eng

மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற

மாணவியை நேற்று (18) காலையில் இருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.

குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மாணவி காணாமல் போனது தொடர்பாக நேற்றும், இன்றும் தேடிய பெற்றோர் மாணவி பற்றிய தகவல்கள் கிடைக்காததை தொடர்ந்து சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் இன்றைய தினம் (19) சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக குறித்த மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த மாணவி பற்றிய தகவல்கள் ஏதும் தெரிந்தவர்கள் 074-2614797 எனும் மாணவியின் தந்தையின் தொலைபேசிக்கு தகவல்களை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

  • மன்னார் நிருபர் லெம்பட்-


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி