பிடிகல மாபலகம வீதியின் மானமிட பிரதேசத்தில் பெண் ஒருவர் மீது லொறியொன்று மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.



கடந்த 3ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வத்தஹேன தியகிதுல் கந்த பிரதேசத்தைச் சேர்ந்த நிரோஷா உதயங்கனி என்ற 39 வயதுடைய திருமணமான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர் எனவும் கொழும்பில் பணிபுரிந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய இவர், தனது கணவருடன் வௌியில் செல்வதற்காக வீதியில் காத்திருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த பெண் பிரதேசவாசிகளின் உதவியுடன் நியாகம கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

விபத்தை ஏற்படுத்திய லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சாரதி பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி