leader eng

மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன்

தனித்தனியாக பேச்சுக்காளை முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருவதாக அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குவதற்கு பிரயத்தனம் செய்துவரும் நிலையில், தென்னாபிரிக்காவில் இடம்பெற்றது போன்று தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பீர்த்தி செய்யும் வகையில் புதிய அரசமைப்பின் ஊடாக நிரந்தரத் தீர்வு காணப்பட்டதன் பின்னரே ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினாரர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரம் 12அம் திகதிக்குப் பின்னர் தமிழ்த் தரப்புக்களுடன் பேச்சுக்களை நடத்த முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். இந்த அழைப்பு தொடர்பில் ஏற்கெனவே தமிழ்த் தலைவர்கள், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் கூடிப் பேசிவிட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

அதேநேரம், இலங்கையில் உள்ள இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைக் களைவதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் தீவரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷாவுடன் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரிவான கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தார்.

தொடர்ந்து, தென்னாபிரிக்காவின் துறை சார்ந்த நிபுணர்கள் குழுவொன்றுடன் வெளிளிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, சிவில் அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். அதனையடுத்து, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவும் குறித்த நிபுணர்கள் குழுவினரைச் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் சுமந்திரனும் பங்குபற்றியிருந்தார்.

இந்நிலையிலேயே அவர் இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி